மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மூதாட்டியை பலாத்காரம் செய்த காமகொடூரன்.. மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த ஊர்மக்கள்..!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள செங்குளத்துப்பட்டியில் வசித்து வருபவர் அம்மாவாசை (50). இவர் அதே பகுதியில் தனியாக வசித்து வந்த 75வயது மூதாட்டி வீட்டிற்கு சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனால் பயந்து அலறிய அந்த மூதாட்டியின் குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் மூதாட்டியின் வீட்டிற்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது அம்மாவாசை அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து ஊர் மக்கள் அம்மாவாசையை மடக்கி பிடித்து தேவதானப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் மூதாட்டியை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அம்மாவாசை மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மூதாட்டியை நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.