திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
காலிங் பெல் அடித்தும் கதவை திறக்காத மனைவி.. பைப் லைனில் ஏறி உள்ளே செல்ல முயன்ற கணவர்.. திடுக்கிடும் சம்பவம்..!
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி விஐபி நகரில் வசித்து வருபவர்கள் தென்னரசு - புனிதா தம்பதியினர். தென்னரசு மார்க்கெட்டிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் தென்னரசு அவருடைய நண்பர்கள் இருவருடன் சேர்ந்து நேற்று இரவு திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று உள்ளார். பின்னர் நள்ளிரவில் வீடு திரும்பிய தென்னரசு வீட்டின் கதவை திறப்பதற்காக காலிங் பெல்லை தொடர்ந்து அடித்துள்ளார்.
ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவரது மனைவி புனிதா கதவை திறக்காததால் மூன்றாவது மாடியில் உள்ள தனது வீட்டிற்கு பைப் லைன் மூலமாக ஏறி செல்ல முயற்சி செய்துள்ளார். அப்போது துரதிஷ்டவசமாக தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தென்னரசின் நண்பர்கள் இருவரும் அவரது உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் தென்னரசை அவரது மனைவி புனிதா மற்றும் நண்பர்கள் இருவரும் சேர்ந்து அடித்துக் கொன்று விட்டு நாடகம் ஆடுவதாக தென்னரசின் உறவினர்கள் போலீஸிடம் புகார் அளித்துள்ளனர். மேலும் தென்னரசின் உறவினர்கள் காவல் நிலையம் முன்பாக அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.