ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
குழுவில் கட்ட வேண்டிய பணத்தை செலவு செய்த மனைவி.. தொடர்ந்து கால் செய்த குழு ஏஜென்ட.. ஆத்திரமடைந்த கணவரின் வெறிச்செயல்.!
பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் பகுதியில் வசித்து வருபவர்கள் மூர்த்தி - ராணி தம்பதியினர். இவர்களுக்கு மோகன்ராஜ் மற்றும் கார்த்திக் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்த தம்பதியினர் இருவரும் ஊர் ஊராக சென்று கூடை பின்னியும் மூங்கில் வேலி அமைத்தும் பொழப்பு நடத்தி வந்துள்ளனர்.
மேலும் இதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் மூர்த்தி தனது மனைவியிடம் பணத்தை கொடுத்து குழுவில் கட்டுமாறு கூறியுள்ளார். ஆனால் ராணி மகளிர் சுய உதவி குழுவிற்கு பணத்தை கட்டாமல் செலவு செய்து வந்துள்ளார். இதனால் அந்த குழுவின் ஏஜென்ட் மூர்த்தியை தொடர்பு கொண்டு பணம் கேட்டு வந்துள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மூர்த்தி தனது மனைவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் இருவரும் கூடை பின்னுவதற்காக காட்டுப்பகுதி வழியாக சென்றுள்ளனர். அப்போது மனைவியின் மீது தீராத கோபத்தில் இருந்து மூர்த்தி கயிற்றால் ராணியின் கழுத்தை நெறித்து முட்புதரில் தூக்கி வீசிவிட்டு சென்றுள்ளார்.
இதனையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் பெண் ஒருவரின் சடலம் கிடப்பதைக் கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த போலீசார் இறந்து கிடந்த பெண் மூர்த்தியின் மனைவி ராணி என்பதை உறுதி செய்தனர். மேலும் ராணியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் ராணியின் கணவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மூர்த்தி அவரது மனைவி ராணியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.