மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தன் மகன் வயது மாணவருடன் அந்த உறவு... மிரட்டிய பெண்... கடற்கரையில் வைத்து தீர்த்து கட்டிய மாணவன்.!
வேதாரண்யம் அருகே தகாத உறவை வெளியே சொல்லி விடுவேன் என்று மிரட்டியதால் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தேத்தாக்குடி தெற்கு சிதம்பர வீரன் காடு பகுதியை சேர்ந்தவர் சுந்தர மூர்த்தி இவருக்கு வயது 50. இவரது மனைவி துர்கா தேவி வயது 42. இந்த தம்பதிக்கு 20 வயதில் தினேஷ் என்ற மகன் இருக்கிறார். அவர் நாகப்பட்டினத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார்.
வெளிநாட்டில் வேலை செய்து வந்த சுந்தரமூர்த்தி தற்போது சொந்த ஊரில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி அவரது மனைவி துர்கா தேவி சுய உதவி குழுவிற்கு பணம் கட்டி விட்டு வருவதாக வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து சுற்றுவட்டார பகுதிகளில் அவரை தேடினர். இந்நிலையில் மறுநாள் காலை வேதாரண்யம் புஷ்பவனம் கடற்கரையில் படுகாயங்களுடன் துர்கா தேவி சடலமாக கிடப்பதாக தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து சுந்தரமூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்த போது துர்கா தேவி படுகொலை செய்யப்பட்டு பிணமாக கடந்தார். மேலும் அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க நகை செல்போன் மற்றும் வெள்ளி கொலுசு ஆகியவையும் திருடப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து சுந்தரமூர்த்தி அளித்த புகாரின் பேரில் காவல்துறை விசாரணை நடத்தியது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு ஆய்வு செய்து புஷ்பவனம் பகுதியை அடுத்த அழகு கவுண்டர் காட்டைச் சேர்ந்த சுந்தரவடிவேலு என்பவரது மகனான அருண் என்பவரை கைது செய்தனர். இவர் சேலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். அருணிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளியாகி இருக்கிறது. கொலை நடைபெற்ற அன்று துர்கா தேவியும் அருண் ஆகியோரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்திருக்கிறது. இந்நிலையில் துர்கா தேவி அருணிடம் பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார். பணம் தர மறுத்தால் தங்களுக்கிடையே இருக்கும் உறவை அனைவரிடமும் கூறி விடுவதாக மிரட்டி இருக்கிறார். இதனால் ஆத்திரத்தில் அருண், துர்கா தேவியை கொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அருண் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறை அவரை சிறையில் அடைத்தது.