திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
காதலிப்பது போல் நடித்து பெண்ணை கர்ப்பமாக்கி இளைஞர்.. கடைசியில் ட்விஸ்ட் வைத்த நீதிமன்றம்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த செம்மார் கிராமத்தில் வசித்து வருபவர் 30 வயது நிரம்பிய வினோத். இவர் வளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணை காதலிப்பதாக நடித்து அவருக்கு திருமண ஆசை கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனையடுத்து அந்த இளைஞரின் தொடர் பாலியல் அத்துமீறலால் அந்த இளம் பெண் கர்ப்பமாகி உள்ளார். இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி அந்த இளம்பெண் வினோத்தை வற்புறுத்தியுள்ளார். ஆனால் அந்த இளம்பெண்ணை திருமணம் செய்ய வினோத் மறுப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளபோவதாக கூறியுள்ளார்.
மேலும் உனக்கு தேவையான பணத்தை தருகிறேன் இனிமேல் என்னிடம் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளம்பெண் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் வினோத்தை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கானது விழுப்புரம் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் இறுதி விசாரணை நடைபெற்று நீதிபதி ஹெர்மிஸ் குற்றவாளிக்கு தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பில் குற்றவாளியான வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.