திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பெற்ற தாயையே ஆபாச வீடியோ எடுத்த இளைஞர்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் தனது வீட்டில் உள்ள குளியலறையில் குளித்து கொண்டிருக்கும் போது ஜன்னலில் இருந்து ஒரு மர்ம நபர் வீடியோ எடுத்திருக்கிறார். இதனை கண்ட அதிர்ச்சடைந்த அந்த பெண் தனது கணவரிடம் சென்று கூறியுள்ளார்.
இந்நிலையில் ஆபாச வீடியோ எடுத்த மர்ம நபரை அந்தப் பெண்ணின் கணவர் துரத்தி பிடித்து குமரன் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த மர்ம நபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் அவருடைய பெயர் ஸ்ரீராம் எனவும் கிண்டியில் இருக்கின்ற ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் இந்த ஆசாமியின் கைப்பேசியை ஆய்வு செய்த போலீசாருக்கு பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த ஆசாமி பயன்படுத்திய செல்போனில் பல பெண்கள் குளியலாடும் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அதிர்ச்சியூட்டும் விதமாக அந்த ஆசாமியின் பெற்ற தாய் குளிக்கும் வீடியோவும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் ஸ்ரீராம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்