மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெளிநாட்டில் பணிபுரியும் கணவனால் மனஉளைச்சல்: இளம்பெண் செய்த காரியத்தால் தவிக்கும் 2 வயது பெண் குழந்தை..!
மதுரை மாவட்டம், சேடப்பட்டி அருகே திருமணமான 3 ஆண்டுகளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம், சேடப்பட்டி அருகேயுள்ள ஜம்பலப்புரத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் வெளிநாட்டில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமங்கலம் பகுதியை சேர்ந்த நெடுஞ்செழியன் என்பவரது மகள் ஜோதிபிரபா (29) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 2 வயதில் ஒரு மகள் உள்ளார்.
கணவர் வெளிநாட்டில் பணிபுரியும் நிலையில், கணவர் பிரபாகரனுடன் செல்ஃபோனில் பேசும்போது அடிக்கடி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஜோதிபிரபா மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று வீடடில் இருந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சேடப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.