மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அம்பை அருகே ஆற்றில் மூழ்கிய இளைஞர்... தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின் சடலமாக மீட்பு.!
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய இளைஞர் மறுநாள் காலை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் பாபநாசம் மற்றும் கல்லிடைக்குறிச்சி ஆகிய பகுதிகளில் இருக்கும் தாமிரபரணி ஆற்றில் தூத்துக்குடி திருநெல்வேலி மற்றும் கோவில்பட்டி பகுதிகளை சேர்த்தவர்கள் சுற்றுலாவிற்கு வந்து குளித்து செல்கின்றனர்.
இந்நிலையில் நேற்று கோவில்பட்டியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஆலடியூர் தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது கோவில்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரது மகன் விக்னேஸ்வரன்(28)ஆலடியூர் ஆற்று பாலம் அருகே குளித்துக் கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்குச் சென்று மாயமானார்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பை தீயணைப்புத் துறையினர் நீரில் மூழ்கிய இளைஞரை தீவிரமாக தேடினர் . இரவு நேரமானதால் தேடும் பணிகளில் தூய்மை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று காலை மீண்டும் தேடிய போது காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.