மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உளுந்தூர்பேட்டை பகுதியில் தொடர் இருசக்கர வாகனம் திருட்டு: குற்றவாளியின் புகைப்படம் வெளியீடு..!
கடந்த சில மாதங்களாகவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இது தொடர்பாக காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருட்டில் ஈடுபட்ட நபர்கள் 3 இளைஞர்கள் கொண்ட குழு என்பது முதற்கட்டமாக கண்டறியப்பட்டுள்ளது. நேற்று எலவனுசூர் கோட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்லும்போது, சம்பந்தப்பட்ட திருட்டு கும்பல் பயணித்த இருசக்கர வாகனம் விபத்திற்குள்ளாகியது.
இந்த விபத்தில் மூன்று திருடர்களும் தப்பிச்சென்ற நிலையில், ஒருவர் புகைப்படம் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை உள்ளூர் மக்கள் மற்றும் அண்டை மாவட்டத்தில் உள்ளவர்கள் கண்டால் உடனடியாக காவல்துறையினருக்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.