மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பைக்கை திருடிசென்ற மர்மநபர்! பல நாட்களுக்கு பிறகு உரிமையாளருக்கு, பார்சலில் வந்த ஆச்சர்யம்!
கோவை மாவட்டம் சூலூர் அருகே பள்ளபாளையம் என்ற பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் அதே பகுதியில் இருசக்கர வாகனம் பழுது செய்யும் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுரேஷ் கடைக்கு முன்பு தனது பைக்கை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். பின்னர் சிறிதுநேரம் கழித்து வந்து பார்த்தபோது அவரது பைக் அங்கு இல்லை. மேலும் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து சுரேஷ் இதுகுறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பார்த்தபோது, சூலூரில் டீக்கடையில் பணிபுரிந்து வந்த திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த பிரசாந்த் என்பவர் பைக்கை எடுத்து சென்றது தெரியவந்தது.
இந்நிலையில் சமீபத்தில் சூலூர் பார்சல் நிறுவனத்தினர் பார்சல் ஒன்று வந்துள்ளதாக கூறி சுரேசை அழைத்துள்ளனர். அங்கு சென்று பார்த்தபோது திருட்டுப்போன அவரது பைக் பார்சலில் வந்திருந்தது. இதனைத் தொடர்ந்து அவர் பைக்கை எடுத்து சென்றுள்ளார்
இந்நிலையில் விசாரணையில், ஊரடங்கால் பேருந்துகள் எதுவும் இல்லாத நிலையில் தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக பிரசாந்த் பைக்கை எடுத்து சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.