திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தினமும் தொல்லை தந்த கணவன்; மகன்களின் உதவியுடன் தாய் பரபரப்பு சம்பவம்.. ஆண்டிபட்டியில் அதிர்ச்சி.!
தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி கணேசபுரம், கிழக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பாலமுருகன். இவருக்கு மணி என்ற மனைவியும், சூர்யா, சுகன் என்ற மகனும், நாகஜோதி என்ற மகளும் உள்ளனர்.
மகள் திருமணம் முடிந்து வேறு வீட்டிற்கு சென்ற நிலையில், மூத்த மகன் சூர்யா தனது குடும்பத்துடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகிறார். இளைய மகன் சுகன் கோயம்புத்தூரில் உள்ள ஒர்க்ஷாப்பில் வேலை செய்து வருகிறார்.
பாலமுருகன் தினமும் மது அருந்திவிட்டு மனைவி மற்றும் மகனிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பாலமுருகன் மீண்டும் மது அருந்திவிட்டு தாய் - மகன்களிடம் தகராறு செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தாய், இரண்டு மகன்கள் சேர்ந்து கயிறால் பாலமுருகனின் கழுத்தை நெரித்து கொலை செய்து இருக்கின்றனர். பின் நிலைமையை உணர்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்ததாக நாடகமாடியுள்ளனர்.
இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் தகவல் அறிந்து வந்து பாலமுருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் முதலில் மூவரும் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவிக்க, அதிகாரிகள் மேற்கொண்ட தீவிர விசாரணைக்கு பின் உண்மை அம்பலமானது.
இதனையடுத்து, காவல் துறையினர் பாலமுருகனை கொலை செய்த அவரின் மனைவி, 2 மகன்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.