மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய பி.இ.டி வாத்தி.. கேடுகெட்ட செயலுக்கு குடும்பமே ஒத்து..! நண்பன் துரோகியாக பயங்கரம்.!!
பெண்ணை ஆபாசமாக படம்பிடித்து மிரட்டிய உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்த குடும்பத்தினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நண்பனின் வீடு என்று நம்பி குடும்பத்தினரை அனுப்பி வைத்ததற்கு, நண்பன் செய்த மாபெரும் துரோகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, கதிர்நரசிங்கபுரம் பகுதியை சார்ந்தவர் அருள் குமரன் (வயது 39). இவர் ஆண்டிபட்டி அருகேயுள்ள கன்னியபிள்ளைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது நண்பர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் அருகே வசித்து வருகிறார்.
அவரின் அக்கா மற்றும் 27 வயது அக்கா மகள் நீதிமன்ற வழக்கு தொடர்பாக ஆண்டிபட்டிக்கு வந்துள்ளனர். பின்னர், கதிர்நரசிங்கபுரத்தில் இருக்கும் அருள் குமரனின் வீட்டில் அனைவரும் தங்கியுள்ளனர்.
அப்போது, 27 வயது இளம்பெண் குளிப்பதை அருள் குமரன் ரகசியமாக படமெடுத்து இருக்கிறார். பின்னர், அதனை வைத்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இளம்பெண்ணுக்கும் - அருள் குமரனுக்கும் திருமணம் நடைபெற்று முடிந்ததாக போலி புகைப்படமும் தயாரித்து இருக்கிறார்.
இதனை இளம்பெண்ணின் தாயிடம் காண்பித்து, அவரை வேறொரு நபருக்கு திருமணம் செய்து வைக்கக்கூடாது என அருள் குமரன் மிரட்டி இருக்கிறார். இந்த விஷயம் தொடர்பாக ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் அருளிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
பின்னர், அவரிடம் இருந்து ஆபாச படங்களை கைப்பற்றிய நிலையில், அருள் குமரனின் நடவடிக்கைக்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை முருகேசன், தாய் சரோஜா, தங்கை மீனா ஆகிய 4 பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அருள் குமரன் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.