மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாற்றுத்திறனாளி பெண் மாயமான விவகாரம்: வீட்டில் நடந்த பயங்கரம்.. அதிர்ச்சி திருப்பம்..!
கூடலூர் அருகே மாயமானதாக கூறப்பட்ட மாற்றுத்திறனாளி பெண், வீட்டில் புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டத்திலுள்ள கூடலூர், குள்ளப்பகவுண்டன்பட்டி கிராத்தில் வசித்து வருபவர் முத்துப்பேச்சி. இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார் மற்றும் மாற்றுத்திறனாளி ஆவார்.
இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக ரேஷன் கடைக்கு சென்று திரும்பிய முத்துப்பேச்சி, அதன்பின்னர் மாயமாகியுள்ளார். இதனால் அவரை காணாது தேடி அலைந்த உறவினர்கள், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முத்துப்பேசியை தேடி வந்த நிலையில், அவரது வீட்டின் அருகே தரை தோண்டப்பட்டு மூடப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், அந்த இடத்தில் மீண்டும் தோண்டி பார்த்தபோது முத்துப்பேச்சியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த அதிகாரிகள், அவரை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.