ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
என் காதலை ஏத்துக்க மாட்டியா?? சாவு; இளம்பெண்ணை கத்தியால் குத்திய பயங்கரம்., ஊசலாடும் உயிர்.!
காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் நடந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள அழகர்சாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ். இவர் இதே பகுதியை சேர்ந்த பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதனால் அவ்வப்போது பெண்ணை பின்தொடர்ந்து காதல் தொல்லை கொடுப்பது வழக்கம்.
இந்த நிலையில், சம்பவத்தன்று பெண்ணிடம் காதலை வெளிப்படுத்திய நிலையில், அவர் மீண்டும் முத்துராஜின் காதலை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கயவன் தான் எடுத்துச்சென்ற கத்தியால் பெண்ணை குத்தியுள்ளான்.
நிலைதடுமாறி அலறல் சத்தத்துடன் வீழ்ந்த பெண்ணை மீட்ட அக்கம் பக்கத்தினர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், பெண்ணிடம் வாக்குமூலம் பெற்று வழக்குப்பதிவு செய்தனர்.
இதனையடுத்து, பெண்ணை கத்தியால் குத்திய முத்துராஜை கைது செய்த காவல் துறையினர், விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.