ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
கொரோனாவால் இப்படியும் அழிவு ஏற்படுமா.! பாசம் நிறைந்த குடும்பத்தில் ஏற்பட்ட சோக கதை..
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் - ராமலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு வசந்த் (25), சசிக்குமார் (19), குருதாஸ் (13) என்ற 3 மகன்கள் உள்ளனர். மணிகண்டன் ஆண்டிப்பட்டியில் ஜவுளிக்கடை நடத்தி வந்துள்ளார். மூத்த மகன் வசந்த் தந்தைக்கு உதவியாக ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
மணிகண்டத்தின் இரண்டாவது மகன் சசிக்குமார் ராஜஸ்தானில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவத்தால் தனது சொந்த ஊர் திரும்பியுள்ளார் சசிக்குமார். அப்போது தேனி மாவட்ட சோதனை சாவடியில் உள்ள மருத்துவ முகாமில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, போடியில் உள்ள தனியார் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டார்.
அதன்பின் சில நாட்கள் கழித்து பரிசோதனை முடிவில் சசிக்குமாருக்கு கொரோனா இல்லை என வந்துள்ளது. இருப்பினும் அவரை தனிமைப்படுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த சசிக்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அச்செய்தி கேட்டு அதிர்ச்சியான சசிக்குமாரின் தாயும் சில நாட்களுக்கு பிறகு உடல்நல குறைவால் உயிரிழந்தார்.
மனைவி மற்றும் மகன் இறந்த சோகத்தில் இருந்த மணிகண்டன் காலையில் கடைக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். அவருடன் மூத்த மகன் வசந்த்ம் சென்றுள்ளார். இருவரும் கடைக்கு சென்று வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் கடைக்கு சென்று பார்த்துள்ளனர்.
அப்போது வசந்த் மற்றும் மணிகண்டன் இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு கிடந்துள்ளனர். கொரோனா வராமலேயே ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து 4 பேர் உயிரிழந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.