பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்கள்தான்? வெளியான தகவல்.!
ஆகஸ்ட் மாதம் தியேட்டர்கள் திறக்கப்படுமா.! பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் அரசின் அனுமதிக்காக எதிர்பார்த்துக் காத்திருப்பு..
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட்டு, கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் சமூக இடைவெளியை பின்பற்றும் நோக்கில் அனைத்து தியேட்டர்களையும் மூட உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் ஜுன் மாதம் ஊரடங்கில் சில தளர்வுகள் ஏற்ப்பட்டதை அடுத்து தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் தியேட்டர்களை திறக்க கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஆகஸ்ட் மாதம் தியேட்டர்கள் திறக்கலாம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் பல திரைகள் கொண்ட மல்டிபிளக்ஸ்கள் சங்கம் சார்பில், தியேட்டர்களில் கடைப்பிடிக்கப்படும் பாதுகாப்பு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இவை மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களுக்கும், பிரதமர் அலுவலகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை மத்திய அரசிடம் இருந்து எந்தவித பதிலும் இன்னும் வரவில்லை.
இருப்பினும் தியேட்டர்கள் அனைத்தும் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் அரசின் அனுமதிக்காக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.