திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தொடரும் மழையின் மிரட்டல்!. 12 மாவட்டங்களை வெச்சு செய்யப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
மாண்டஸ் புயல் நேற்று கரையை கடந்ததை தொடர்ந்து 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் கடந்த 5 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுப்பெற்று புயலாக உருவெடுத்தது. கடந்த 8 ஆம் தேதி சென்னைக்கு தென்கிழக்கே 350 கி.மீ தூரத்தில் மையம் கொண்டிருந்த மாண்டஸ் புயல் நேற்று சென்னைக்கும் புதுச்சேரிக்கும் நடுவே மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது.
புயல் கரையை கடந்து தாழ்வு மண்டலமாக வலுவிழந்து இருப்பதாகவும், இதன் காரணமாக தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.