35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
கலை மீது கொண்ட அதீத காதல்.. ஆடிக் கொண்டிருந்த போதே உயிரிழந்த தெருக்கூத்து கலைஞர்.! என்ன நடந்தது.?
வேலூர் மாவட்டம் மேல் அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கமலநாதன் (52) என்பவர் தெருக்கூத்து கலைஞர் ஆவார். சிறு வயதில் இருந்தே தெருக்கூத்தின் மீது ஆர்வம் கொண்ட இவர் இதுவரை நூற்றுக்கணக்கான தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார்.
கமலநாதன் ஓம் சக்தி நாடக மன்றத்தின் ஆசிரியராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் மேல் அரசம்பட்டு மடிகம் கிராமத்தில் ஆகஸ்ட் 8ஆம் தேதி காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. அந்த திருவிழாவில், அர்ஜூனன் வேடமிட்டு ஆடி உள்ளார் கமலநாதன்.
அந்த நிகழ்ச்சியில் காலை 5.30 மணியளவில் ஆடிக்கொண்டு இருந்த இவர், திடீரென மயங்கி விழுந்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த சக கலைஞர்கள் அவரை, மீட்டு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு, கமலநாதனை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தெருக்கூத்து ஆடிக் கொண்டிருந்தபோதே, தெருக்கூத்து கலைஞர் உயிரிழந்தது, மேல் அரசம்பட்டு கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் சக கலைஞர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.