மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தனியே இருந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்.. கயவனை புரட்டி எடுத்த பொதுமக்கள்..!
தனியாக குழந்தையுடன் நின்ற பெண்ணிடம் வழி கேட்பது போல சில்மிஷத்தில் ஈடுபட்ட சரக்கு வாகன ஓட்டுநரை, பொதுமக்கள் அடித்து துவைத்து காவல்துறையில் ஒப்படைத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர், கோப்பம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் தனியாக குழந்தையுடன் ஒரு பெண் நின்றுள்ளார். இதனை அவ்வழியாக சென்ற சரக்கு வாகன ஓட்டுனர் ஒருவர் கண்டு, துவாரங்குறிச்சி எந்த வழியாக செல்ல வேண்டும்? என்று வழி கேட்டிருக்கிறார்.
அப்போது அந்தப் பெண் வழி கூறிய நிலையில், திடீரென ஓட்டுநர் பெண்ணிடம் தவறாக நடந்ததுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் ஓட்டுனரை கீழே தள்ளிவிட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை கூச்சலிட்டு அழைத்துள்ளார்.
தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் ஒன்றுகூடி என்னவென்று கேட்கும் போது, இவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக அவர் தெரிவித்த நிலையில், கோபமுற்று அவரை அடித்து வெளுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பின் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சரக்கு லாரி ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.