மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சொகுசு கார்களில் வந்து ஆடுகளை அலேக்காக தூக்கி செல்லும் ஆசாமி.. ஆடு வளர்ப்போர்களே உஷார்..!
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சொகுசு கார்களில் வந்து மர்ம நபர்கள் ஆடுகளை திருடி செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வந்துள்ளது. கடந்த 17ஆம் தேதி திருச்செந்தூர் அருகேயுள்ள ஆலந்தலை பகுதியில் சாலையோரத்தில் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் படுத்துக்கொண்டு இருந்தது.
அப்போது அங்கு வந்த சொகுசு காரிலிருந்து இறங்கிய 40 வயது மதிக்கத்தக்க நபர், ஆட்டை பிடித்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் புறப்பட்டு சென்றுள்ளார். இதனை கண்ட உள்ளூர் பொதுமக்கள் காரை விரட்டிச் சென்ற நிலையில், கார் மின்னல் வேகத்தில் சென்றுள்ளது.
இந்த விஷயம் தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் பதிவாகவே, அதன் மூலமாக புகார் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மேலும், விசாரணையில் கார் சென்னையை சேர்ந்தது என்று உறுதியாகவே, விசாரணை தொடர்கிறது. கடந்த ஒரு மாதமாக அங்கு 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் திருடப்பட்டு வந்தது அம்பலமாகியுள்ளது.