மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#JustIN: 1 அடிக்கு உயர எழும் அலைகள்; திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் குளிக்க தடை.!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணியசாமி கோவிலுக்கு வருகைதரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள், அங்குள்ள கடலில் நீராடுவது வழக்கமான ஒன்றாகும்.
தென்மாவட்டத்தில் உள்ள கடலோரத்தில் கடல் அலைகள் அரை அடி முதல் ஒரு அடி வரை எழக்கூடும் என தென்மாவட்ட கடலோரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இந்நிலையில், பாதுகாப்பு கருதி திருச்செந்துர் கடலில் பக்தர்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடல் பகுதியும் சீற்றமாக காணப்படுவதால், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடலுக்கு அருகே பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் செல்லாமல் பார்த்துக்கொள்ள காவல்துறையினர் கடற்கரைக்குள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.