திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
160 கிலோ குட்காவுடன் கைதான நபர்.. அதிகாரிகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!
வாகன சோதனையில் 160 கிலோ குட்காவுடன் பிடிபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை பகுதியில் குட்கா கடத்தல் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல்களை கிடைத்துள்ளது.
இதனையடுத்து அவ்வழியாக வந்து செல்லும் வாகனங்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான இடங்களில் காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது காளி குமாரபுரம் பகுதியை சார்ந்த வாலகுரு (வயது 37) என்பவர் 169 கிலோ குட்காவை கடத்தி விற்பனைக்காக வைத்திருந்தது அம்பலமானது.
இதனால் அவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் இருந்த குட்காக்களை பறிமுதல் செய்தனர். இவரிடம் இருந்து மொத்தமாக 9 மூடை குட்காக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.