திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"அம்மா - அப்பா, பாப்பா விட்டுட்டு போறன்".. திருநெல்வேலி மாணவி எடுத்த முடிவால் சோகம்..! நெஞ்சை உலுக்கும் கடிதம்.!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு அடுத்த கல்லடி ராஜலிங்கபுரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 53). இவர் ஒரு தொழிலாளி. இவருக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மகள் பாப்பா (வயது 18). இவர் பொன்னாக்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி பட்டப்படிப்பிற்காக சேர்ந்துள்ளார்.
இதன் கட்டணமாக ரூ.12 ஆயிரத்தை முத்துக்குமார் இரண்டு தவணைகளாக செலுத்திய நிலையில், குடும்ப செலவுக்கு போதிய பணமின்றி தவித்துள்ளனர். மேலும் முத்துக்குமார் தனது மகளின் படிப்பிற்காக மிகுந்த சிரமப்பட்டு பணத்தை ஏற்பாடு செய்து செலுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த பாப்பா தனது படிப்பு செலவுக்காக பெற்றோர் மிகுந்த சிரமப்பட்டு பணம் செலுத்துவதாக மனவேதனையில் இருந்துள்ளார்.
இதற்கிடையே முத்துக்குமார் தனது மனைவியுடன் களக்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்ற நிலையில், வீட்டின் உட்புறமாக கதவை பூட்டி கொண்ட பாப்பா துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்த தந்தையும், தாயும் கதவைத் தட்டிய போது மகள் கதவை திறக்காததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது மகள் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து களக்காடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தகவலறிந்து வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்தனர்.
விசாரணையின் போது பாப்பாவின் கைப்பையை சோதனை செய்ததை தொடர்ந்து, அதில் மாணவி தற்கொலை குறிப்பு எழுதி வைத்திருந்தார். தனது படிப்பு செலவுக்காக பெற்றோர்களை சிரமப்படுத்தியதால் தற்கொலை செய்ய முடிவு எடுத்ததாக அதில் குறிப்பிட்டுள்ளாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.