காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
சுயேச்சை கவுன்சிலர் கடத்தல்.. கைக்குழந்தையுடன் கணவன் போராட்டம்.!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரணி பேரூராட்சி தேர்தலில், பேரூராட்சி மன்ற தலைவராக ராஜேஸ்வரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைத்தலைவர் தேர்தல் மதியம் 02.30 மணியளவில் நடைபெறவிருந்துள்ளது.
ஆரணி பேரூராட்சி துணைத்தலைவர் பொறுப்புக்கு திமுக சார்பில் கண்ணதாசன் என்பவர் போட்டியிட்ட நிலையில், 3 ஆவது வார்டில் சுயேச்சை வெற்றி வேட்பாளர் பிரபாவதி தனது வாக்கை பதிவு செய்ய காத்திருந்துள்ளார்.
அப்போது, சிலர் அவரை கடத்தி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பிரபாவதியின் கணவர், தனது மனைவியை மீட்டுத்தரக்கூறி பேரூராட்சி அலுவலகம் முன் தனது குழந்தையுடன் போராட்டம் நடத்தினார்.
சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, மனைவியை கண்டறிவதாக உறுதி அளித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு சூழல் ஏற்பட்டுள்ளது.