திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 17 வயது சிறுவன் போக்ஸோவில் கைது.!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில், 5 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமி அங்குள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி பயின்று வருகிறார்.
இந்நிலையில், சிறுமியின் செயலில் மாற்றங்கள் தெரியவே, அவரிடம் பெற்றோர் விசாரித்த போது பாலியல் தொல்லைக்கு உள்ளாகியது தெரியவந்தது.
பெற்றோர் மக்களிடம் தவறாக நடந்தது யார்? என கேட்கையில், வேன் கிளீனராக பணியாற்றி வந்த 17 வயது சிறுவனின் அதிர்ச்சி செயல் தெரியவந்தது.
இதனையடுத்து, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வேன் கிளீனர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். முன்னதாக வேன் கிளீனரை சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.