96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
வேட்டையாடப்படும் பூனைகள்.. உணவகத்தில் இறைச்சிக்காக விற்பனை?.. சென்னையில் பகீர்.!
சென்னையில் உள்ள எழும்பூர் நகரை சேர்ந்தவர் ஜோஷுவா. இவர் விலங்கு நல ஆர்வலர் ஆவார். சம்பவத்தன்று தனது வீட்டருகே மர்ம நபர் சாலைகளில் சுற்றித்திரியும் பூனைகளை பிடித்து மூட்டையில் கட்டுவதை கண்டுள்ளார்.
ஆதரவற்ற பூனை உட்பட விலங்குகளுக்கு உணவளித்து வரும் ஜோஷுவா, சம்பந்தப்பட்ட நபரை விரட்டிப்பிடித்து பூனைகள் குறித்து கேட்டுள்ளார். அவர் ஒரு பூனைக்கு ரூ.100 கொடுத்தால் அவரிடமே கொடுத்து செல்வதாக கூறியுள்ளார்.
தற்போது இதுகுறித்து கூறியுள்ள ஜோஷுவா, அவர் ஒருவர் பூனை சாப்பிட்டால் ஒரு பூனை போதும். இவ்வுளவு பூனைகளை எதற்கு பிடித்து செல்ல வேண்டும்? அவர் ஒருவேளை உணவகத்தில் பூனையை விற்பனை செய்து இருக்கலாம் என குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.