மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மதுபானக்கடைகள் இங்கு திறக்க தடை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிபூண்டி, ஆரம்பாக்கம் கிராமத்தில் உள்ள யாழினி நகர் பகுதியில் அரசு மதுபான கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, அருண் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அரசுத்தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், "ஆரம்பாக்கம் கிராமம் யாழினி நகரில் உள்ள விளைநிலத்தில் அரசு மதுபானக்கடை திறக்கப்படப்போவது இல்லை. சட்டவிதியின்படி உரிய இடத்தில் மதுபானக்கடை அமைக்கப்படும்" என்று விளக்கம் அளித்தார்.
இதனைத்தொடர்ந்து, அருண் தரப்பில் வழக்கறிஞரும் எதிர்வாதம் பதிவு செய்த நிலையில், இருதரப்பு வாதங்களை குறித்து வைத்துக்கொண்ட நீதிபதி வேளாண் நிலத்தில் மதுபானக்கடைகள் அமைப்பதை அனுமதிக்க இயலாது. அரசு தரப்பில் வேளாண் நிலத்தில் மதுபானக்கடை அமைக்கப்பட மாட்டாது என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளதால், வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.