மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கடன் வாங்கிய பெண்ணை படுக்கைக்கு அழைத்த காமக்கொடூரன்.. மறுத்ததால் கத்திக்குத்து.. பரபரப்பு சம்பவம்.!
மகளின் திருமண செலவுக்காக கடன் வாங்கிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவன், கடனை பெண் அடைத்த ஆத்திரத்தில் படுக்கைக்கு அழைத்து கத்தியால் குத்திய சம்பவம் நடந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ராமன்கோவில் கிராமத்தில் வசித்து வருபவர் சம்பத் (வயது 57). இவரிடம், அப்பகுதியில் வசித்து வரும் 39 வயது பெண்மணி மகளின் திருமண செலவுக்காக ரூ.50 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இந்த பணத்தை செலுத்த பெண்ணுக்கு காலதாமதம் ஏற்பட்டதாக தெரியவருகிறது.
இதனை தனக்கு சாதகமாக்க நினைத்த சம்பத், பெண்ணை சந்திக்கும் நேரத்தில் பணத்தை கொடு இல்லையேல் என்னுடன் வந்து *டு என்று ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்து வற்புறுத்தி வந்துள்ளான். இதனால் மனதுடைந்துபோன பெண்மணி, வேறொருவரிடம் இருந்து கைமாற்றாக பணம் வாங்கி சம்பத்துக்கு கொடுத்து கடனை அடைந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று பெண் வேளைக்கு செல்வதற்கு பணப்பாக்கம் இரயில் நிலையத்தில் இரயிலுக்காக காத்திருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த சம்பத், நீ என்னுடன் தனிமையில் இருக்க வேண்டும் என வற்புறுத்தி, ஆபாசமாக பேசி இருக்கிறார். இந்த விசயத்திற்கு பெண்மணி மறுப்பு தெரிவிக்கவே, சம்பத் தான் வைத்திருந்த கத்தியால் பெண்ணின் தலையில் வெட்டி தப்பி சென்றுள்ளார்.
இதனால் படுகாயமடைந்த பெண்ணை மீட்ட பொதுமக்கள், சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக பெண் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கடம்பத்தூர் காவல் துறையினர், சம்பத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.