மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரிசப்சனில் ஓட்டம்பிடித்த மணமகனுடன் திடீர் கல்யாணம்; இப்படியும் காதல் திருமணம்?.. திருவள்ளூரில் சுவாரஷ்யம்.!
திருவள்ளூர் மாவட்டத்தில் வசித்து வருபவர்கள் ஸ்ரீதர், அனுஷா. இவர்கள் இருவரும் பெங்களூரில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். இருவரும் காதல் வயப்பட்ட நிலையில், உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். பின் திருமணம் செய்துகொள்ளலாம் என இருதரப்பு பெற்றோர்களிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களும் சம்மதம் தெரிவித்த காரணத்தால், திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்புடன் நடைபெறவிருந்தது. இதனிடையே, திருமணத்திற்கு முந்தைய நாள், வரவேற்பின்போது காதல் ஜோடியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குடிபோதையில் தகராறு செய்த கணவன்... சுத்தியலால் மண்டையை பிளந்த மனைவி.!! அதிர்ச்சி சம்பவம்.!!
காதலன் ஓட்டம்
இதனால் வருத்தமடைந்த காதலன், தனது வருங்கால மனைவியிடம் கூட சொல்லாமல் மண்டபத்தை விட்டு ஓட்டம் பிடித்தார். இதனால் அதிர்ந்துபோன அனுஷா, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இகன்பேரில் அதிகாரிகள் ஸ்ரீதரை தீவிரமாக தேடி வந்தனர்.
ஓடிப்போன காதலனுடன் திடீர் திருமணம்
இந்நிலையில், இன்று காலை காதலியை தொடர்பு கொண்ட ஸ்ரீதர், இருவரும் எளிமையான முறையில் திருமணம் செய்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளார். இதனால் உடனடியாக அனுஷா - ஸ்ரீதர் பெற்றோர் முன்னிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அருகே இருக்கும் கோவிலில் மாலைமாற்றி, தாலி கட்டி திருமணம் செய்துகொண்டனர்.
அதிகாரிகள் அறிவுரை
பின் வழக்கின் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனக்கூற, தாலி கட்டிய கையுடன் காதல் திருமணம் செய்த ஜோடி காவல் நிலையம் வந்தது. அங்கு அதிகாரிகள் இருதரப்பு வாதத்தை குறித்துவைத்து, இருவருக்கும் அறிவுரை வழங்கி, மணமகனை கண்டித்து காதலியுடன் இணங்கி வாழுமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் 40 ஆண்டுகளுக்கு பின் அசைவ உணவுகள் நோயாளிகளுக்கு விநியோகம்.!