மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஓசியில் பொருள் தராததால், மளிகைக்கடை சூறை.. பட்டப்பகலில் துணிகர செயல்.!
மளிகைக்கடை உரிமையாளரை தாக்கி, கடையை சூறையாடிய 2 பேர் பெரவள்ளூர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் உள்ள பெரவள்ளூர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 35). இவர் தனது வீட்டருகே மளிகை கடையை நடத்தி வருகிறார். கடந்த 28 ஆம் தேதி மாலை நேரத்தில் மளிகைக்கடைக்கு வந்த 2 பேர், தண்ணீர் பாட்டில் மற்றும் தின்பண்டம் வாங்கிவிட்டு பணம் தராமல் புறப்பட்டுள்ளனர்.
இதனால் ராஜசேகர் வாங்கிய பொருளுக்கு பணம் கேட்கவே, ஆத்திரமடைந்த 2 பேர் ராஜசேகரை தாக்கி, கடையை சேதப்படுத்தி தப்பி சென்றுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக ராஜசேகர் K5 பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ராஜசேகரை தாக்கிய அரக்கோணத்தை சேர்ந்த தினேஷ் குமார் (வயது 30), மணிகண்டன் (வயது 28) ஆகியோரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே குற்ற செயலில் ஈடுபட்டு சிறைக்கு சென்று, ஜாமினில் வந்து கடையை அடித்து நொறுக்கியதும் விசாரணையில் தெரியவந்தது.