மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
போக்ஸோ வழக்கில் கைதான இளைஞன் துணிகரம்; பாதிக்கப்பட்ட சிறுமியிடம் மீண்டும் அத்துமீற முயற்சி.!
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள புள்ளரம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமி, தனது பெற்றோருடன் இருக்கிறார். அங்குள்ள பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வருகிறார்.
இந்நிலையில், இவ்வூரில் வசித்து வரும் தனுஷ் என்ற ஆதி (வயது 19), கடந்த ஏப்ரல் மாதம் எட்டாம் தேதி சிறுமிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிய வருகிறது.
இந்த விஷயம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, தனுஷை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.
பின் தற்போது ஜாமினில் தனுஷ் வெளியே வந்த நிலையில், கடந்த பத்தாம் தேதி இரவு வீட்டில் வெளியே சிறுமி படித்துக் கொண்டிருந்தபோது மீண்டும் சிறுமியை பாலியல் ரீதியாக பயன்படுத்த தொல்லை கொடுத்ததாக தெரிய வருகிறது.
இதனால் பதறிப்போன சிறுமி அலறவே, அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்துள்ளனர். தனுஷ் ஓட்டம் பிடித்த நிலையில், சிறுமியின் பெற்றோர் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தனுஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். போக்ஸோ வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட தனுஷ், மீண்டும் அதே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார்.