மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடும்பச்சண்டையில் 11 மாத கைக்குழந்தைக்கு விஷம் குடித்த தாய்; இரு உயிரும் பலியானதால் உறவினர்கள் கண்ணீர்..!
கணவருடன் கொண்ட சண்டையில் தாய் தற்கொலை செய்துகொள்ள, விஷம் கொடுக்கப்பட்டு உயிருக்கு போராடிய பச்சிளம் குழந்தையும் பலியான சோகம் நடந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி, கிருஷ்ணாபுரம் துர்கா நகரில் வசித்து வருபவர் நவீன் குமார். இவரின் மனைவி சிவசங்கரி (வயது 24). இவர்களின் 11 மாத குழந்தை சர்வீன் குமார். தம்பதிகளிடையே அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த 21ம் தேதி நவீன் போதையில் ரகளையில் ஈடுபட்ட நிலையில், மனவேதனையடைந்த சிவசங்கரி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். மேலும், 11 மாத கைக்குழந்தைக்கு விஷம் கொடுத்துள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தாய்-குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த சிவசங்கரி கடந்த 25ம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 11 மாத குழந்தையும் பரிதாபமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பொன்னேரி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.