மாடிப்படியில் கால் இடறி விழுந்த விஜய் தேவரகொண்டா; ஷாக்கில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு?
காதல் திருமணம் செய்த இளைஞர் 10 பேர் கும்பலால் அடித்தே கொலை; துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்.!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.கே பேட்டை, ஐயனெரி கிராமத்தில் வசித்து வருபவர் சரத்குமார் (வயது 22). இவர் திருமணம் உட்பட நிகழ்ச்சியில் நடனமாட இசைக்குழுவை நடத்தி வருகிறார். இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் ஆயலாம்பேட்டையில் வசித்து வரும் மாணவி சோளிங்கர் அரசுப்பள்ளியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் படித்து வந்துள்ளார்.
பேருந்தில் பயணம் செய்தபோது மாணவிக்கும் - சரத் குமாருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் காதலாக மாறவே, இருவரும் காதலித்து வந்துள்ளனர். மாணவிக்கு தற்போது 19 வயது ஆகும் நிலையில், அவரின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, வீட்டினை விட்டு வெளியேறிய காதல் ஜோடி பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்துகொண்டது. திருமணத்திற்கு பின்னர் சரத் குமாரின் பெற்றோர் தம்பதிகளை ஏற்றுக்கொண்டதால், இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இதற்கிடையில், தங்களுக்கு தவமிருந்து கிடைத்த ஒரே மகளின் மீது சாந்தம் கொண்ட பெற்றோர் தலைதீபாவளிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதனையடுத்து, சரத் குமார் தனது காதல் மனைவியுடன் மாமியார் வீட்டிற்கு சென்று இருக்கிறார். இந்நிலையில், நேற்று இரவு நேரத்தில் பெட்ரோல் போடுவதற்கு சரத் குமார் சென்றபோது, அவருடன் மாமனார் உமாபதியும் சென்றுள்ளார். இவர்கள் சோளிங்கர் ஐப்பேடு பெட்ரோல் நிலையத்தில் வாகனத்திற்கு எரிபொருள் நிரப்ப சென்றுள்ளனர்.
அப்போது, கத்தி, உருட்டுக்கட்டை உட்பட பயங்கர ஆயுதத்துடன் இருசக்கர வாகனத்தில் வந்த 10 பேர் கும்பல், சரத் குமாரை சரமாரியாக தாக்கி இருக்கிறது. மருமகனை காப்பாற்ற முயற்சித்த உமாபதியையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர், சரத்குமாரை அவர்கள் கடத்தி செல்ல, உமாபதி உறவினர்களுக்கு சம்பவம் குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அவர்கள் சரத் குமாரை தேடிச்சென்ற நிலையில், 2 கி.மீ தொலைவில் உள்ள இரத்த வெள்ளத்தில் கிடைத்தவரை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். அங்கிருந்து சென்னைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள சோளிங்கர் காவல் துறையினர், சரத் குமார் யார்? எதற்காக? கொலை செய்தார்கள் என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.