மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கடும் வெயிலினால் துயரம்; ஆதரவற்ற முதியவர் மயங்கி விழுந்து பலி.!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி பகுதியில், கடந்த சில நாட்களாகவே கடுமையான வெப்பம் பதிவாகி வந்தது. இதனால் மக்கள் பகல் வேளைகளில் வெளியே சென்று வர இயலாமல் சிரமம் அடைந்தனர்.
வெயிலால் மக்கள் கடும் அவதி:
மேலும், நண்பகல் வேளைகளில் பணிசூழலால் வெளியே சென்ற பலரும் கடும் அவதிக்கு உள்ளாகியிருந்தனர். இந்நிலையில், திருத்தணி பேருந்து நிலையத்தில் தங்கியிருந்த ஆதரவாக முதியவர் சொக்கலிங்கம் (வயது 65), வெயிலின் தாக்கத்தால் கடும் அவதிப்பட்டார்.
முதியவர் மயங்கி விழுந்து பலி:
ஒருகட்டத்தில் அவர் மயங்கி விழுந்த நிலையில், தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் சொக்கலிங்கத்தை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரின் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டது.