மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
4 வருடமாக சேர்ந்து வாழ்ந்த திருநங்கை பிரிந்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை..!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு, கூடல்வாடி கிராமத்தில் வசித்து வருபவர் தினேஷ் (வயது 23). ஸ்ரீபெரும்புதூரை அடுத்துள்ள ஏரிக்கரை செக்கடி தெருவில் திருநங்கை வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, கடந்த 4 வருடமாக ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாகவே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், ஆத்திரமடைந்த திருநங்கை தினேஷின் பெற்றோருக்கு தொடர்பு கொண்டு, உங்களின் மகனை வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள் என்று கூறி அழைப்பை துண்டித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, திருநங்கையின் வீட்டிற்கு சென்ற தினேஷின் தந்தை ரவி, மகனுக்கு அறிவுரை கூறி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனால் மனவருத்தத்தில் இருந்த தினேஷ், தன்னுடன் பழகிய திருநங்கை சேர்ந்து வாழ இயலாது என்று கூறிவிட்டார் என தந்தையிடம் புலம்பியுள்ளார்.
ஸ்ரீபெரும்புதூரில் இருந்து பேருந்தில் சென்றபோது, ஓடும் பேருந்தில் இருந்து கீழே இறங்கிய தினேஷ் ஓட்டம் பிடித்து தலைமறைவானார். மகனை காணாது தந்தை தேடி அலைந்த நிலையில், தினேஷ் மீண்டும் திருநங்கை வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது, அவர் வீட்டில் இல்லை. இதனால் மனவேதனைக்கு உள்ளாகிய தினேஷ் திருநங்கையின் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.