மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொலை வழக்கில் குற்றவாளியான பனங்காட்டுப்படை கட்சி தலைவர், ரௌடி ராக்கெட் ராஜா கைது..!
ரௌடி ராக்கெட் ராஜா காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை, ஆனைகுடியை சேர்ந்தவர் ராக்கெட் ராஜா. இவர் பனங்காட்டுப்படை கட்சியின் தலைவர் ஆவார். இவனின் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 3 கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி நாங்குநேரி மஞ்சக்குளம் கிராமத்தினை சேர்ந்த சாமிதுரை கொலை செய்யப்பட்ட நிலையில், இவ்வழக்கில் ராக்கெட் ராஜா கைது செய்யப்பட்டு இருக்கிறார். மும்பையில் இருந்து சொந்த ஊர் திரும்பிய ராக்கெட் ராஜா திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
ராக்கெட் ராஜா திருவனந்தபுரம் வரும் தகவலை அறிந்த திருநெல்வேலி காவல் துறையினர், விரைந்து சென்று அவனை கைது செய்துள்ளனர். மஞ்சக்குளம் கொலை வழக்கில் முன்னதாகவே விக்டர், முருகேசன் ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.