மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: Lenovo நிறுவனத்திற்கு ரூ.2.60 இலட்சம் அபராதம் விதித்த திருவாரூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம்.. அதிரடி உத்தரவு..!
வாடிக்கையாளருக்கு தரமில்லாத பொருளை அனுப்பி வைத்துவிட்டு அலட்சியமாக இருந்த லெனோவா நிறுவனத்திற்கு ரூ.2.60 இலட்சம் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நவநீத கிருஷ்ணன். இவர் கடந்த 2021ம் ஆண்டில் Lenovo Idea Pair நிறுவனத்தின் லேப்டாப்பை ரூ.39 ஆயிரத்திற்கு வாங்கியுள்ளார்.
இந்த மடிக்கணினி ஆன்லைன் நிறுவனம் மூலமாக டெலிவரி செய்யப்பட்ட நிலையில், அதனை ஆன் செய்யும் போது டிஸ்பிளே வேலை செய்யவிலை. இதனால் இதுகுறித்து டெலிவரி நிறுவனத்திடம் கூறுகையில், அவர்கள் லெனோவா நிறுவனத்திடம் புகாரளிக்க அறிவுறுத்தியுள்ளனர்.
லெனோவோ நிறுவனத்தாரிடம் புகார் அளித்தபோது, அதுகுறித்த அதிகாரி சோதனை செய்து புகாரை உறுதி செய்து பேக்கிங் செய்து அனுப்பியுள்ளார். ஆனால், மீண்டும் லேப்டாப் அனுப்பப்படவில்லை. பணமும் திரும்பி வரவில்லை.
இதனால் நவநீத கிருஷ்ணன் திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யவே, மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் இன்று லெனோவா நிறுவனத்திற்கு ரூ.2.60 இலட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
வாடிக்கையாளரின் மன உளைச்சலுக்கு ஈடு செய்ய ரூ.50 ஆயிரமும், வழக்கு செலவுக்காக ரூ.10 ஆயிரமும், திருவாரூர் மாவட்ட நுகர்வோர் நல நிதிக்கு ரூ.2 இலட்சம் என மொத்தமாக ரூ.2.60 இலட்சம் அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய லெனோவா மடிக்கணினி வழங்கவும் ஆணையிட்டுள்ளது.