திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட திமுக பிரமுகரின் மகன் கையும் களவுமாக கைது: திருவாரூரில் காவலர்கள் அதிரடி.!
திருவாரூர் நகரில் உள்ள 24வது வார்டு திமுக கவுன்சிலர் ரஜினி சின்னப்பா என்ற சின்னவீரன். திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர், நகர பொருளாளர் உட்பட பல்வேறு பொறுப்புகளில் இருந்து வருகிறார்.
இவருக்கு ரமணா என்ற மகன் இருக்கிறார். இவரும் திமுக பிரமுகர் என கூறப்படுகிறது. இந்நிலையில், காவல் துறையினர் நடத்திய கஞ்சா வேட்டையில், ரமணா கையும் களவும் சிக்கிக்கொண்டார்.
இதனையடுத்து, ரமணாவை கைது செய்த காவல் துறையினர், தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, இந்த விவகாரத்தை பாஜகவினர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்ட தி.மு.க இளைஞர் அணி துணை அமைப்பாளர், திருவாரூர் நகர் பொருளாளர், நகராட்சி 24-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் ரஜினி சின்னா என்கிற சின்ன வீரன் என்பவரின் மகன் ரமணா கஞ்சா கடத்திய போது காவல்துறையால் கஞ்சாவுடன் கைது.
— Dr.SG Suryah (@SuryahSG) December 22, 2023
திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை கணஜோராக… pic.twitter.com/EHbF4Mq0Nu