திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கலெக்டர் ஆவதே இலட்சியம் - 580/600 மதிப்பெண் எடுத்த திருவாரூர் மாணவி வைஷ்ணவி நெகிழ்ச்சி..!
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவி வைஷ்ணவி. இவர் அரசுப்பள்ளியில் பயின்று வருகிறார். தற்போது 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.
மாவட்ட அளவில் முதலிடம்:
இந்த தேர்வில் மாணவி 600 க்கு 580 மதிப்பெண் பெற்று பள்ளியிலேயே முதல் இடம் பிடித்துள்ளார். அதேபோல, மாவட்ட அளவிலான அரசுப்பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். இவரின் தந்தை தற்காலிக்காக ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.
ஆட்சியராகும் இலட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள் சகோதரி:
சிறுவயதில் இருந்து நன்றாக படிக்கும் தன்மை கொண்ட வைஷ்ணவி, ஆட்சியராகும் தனது இலக்கை நோக்கி பயணத்தை தொடரவிருக்கிறார். தனது தேர்வுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், பெற்றோர்கள், நண்பர்களுக்கு நன்றியையும் அவர் தெரிவித்தார்.
மாணவி வைஷ்ணவியின் இலட்சியம் நிறைவேற எமது தமிழ்ஸ்பார்க் நிறுவனமும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.