திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பயிர்களை காக்க வயல்வெளி சென்ற தந்தை-மகன் மின்சாரம் தாக்கி பலியான சோகம்; நெஞ்சை உலுக்கும் பரிதாபம்.!
வயலுக்கு சென்ற தந்தையும், மகனும் மின்னல் தாக்கி பலியான சோகம் நடந்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி, தளிக்கோட்டை கிராமத்தில் வசித்து வருபவர் அன்பரசு (வயது 55). இவர் விவசாயி ஆவார். நேற்று நள்ளிரவு நேரத்தில் தளிக்கோட்டை & சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.
அன்பரசுவின் வயலில் குறுவை நெற்பயிர்கள் பயிரிடப்பட்டு இருந்த நிலையில், கனமழையால் பயிர்கள் நீரில் மூழ்கிவிடக்கூடாது என அன்பரசு தனது மகன் அருள் முருகனுடன் (வயது 28) வயல்வெளிக்கு சென்றுள்ளார்.
அந்த சமயத்தில், இடி-மின்னலுடன் கனமழை பெய்த நிலையில், திடீரென இருவரின் மீதும் மின்னல் விழுந்துள்ளது. இதனால் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். வயலுக்கு சென்றவர்கள் வீட்டிற்கு வராததால் குடும்பத்தினர் நேரில் சென்று பார்த்துள்ளனர்.
அப்போது, இருவரும் மின்னல் தாக்கி உடல் கருகி உயிரிழந்தது தெரியவந்தது. இருவரின் உடலையும் கண்டு உறவினர்கள் கதறியழுதனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த மன்னார்குடி காவல் துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.