மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
80 வயது தாயை கொலை செய்து 56 வயது மகன் தற்கொலை.. துணையில்லாத விரக்தியால் சோகம்.!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி, நடராஜ பிள்ளை தெருவில் வசித்து வருபவர் கோமளவள்ளி (வயது 80). இவரின் மகன் ரவிச்சந்திரன் (வயது 56). இவருக்கு தற்போது வரை திருமணம் ஆகவில்லை. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம், ஆயக்காரன்புலம் கிராமத்தில் உள்ள பண்ணையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், வயதான நிலையில் உடல்நலம் குன்றி இருக்கும் தனது தாயை பார்க்க வந்த ரவிச்சந்திரன், கடந்த 10 நாட்களாக வீட்டில் தங்கியிருந்துள்ளார். அப்போது, திருமணம் ஆகாத விரக்தி, உடல்நலம் குன்றிய தாய் குறித்த மனவேதனை ரவிச்சந்திரனுக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்துபோன ரவிச்சந்திரன் வீட்டில் இருந்த குருணை மருந்தை தாய்க்கு கொடுத்துவிட்டு தானும் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்தில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இன்று காலையில் நீண்ட நேரம் ஆகியும் இவர்களின் வீட்டு கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் மன்னார்குடி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது விபரீதம் புரிந்தது. இருவரின் உடலையும் மீட்ட காவல் துறையினர் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது.