திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மதுபோதையில் தகராறு; மகனை போட்டுத்தள்ளிய பெற்றோர்.. மன்னார்குடியில் அதிரவைக்கும் சம்பவம்.!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் பிரசாத். மதுபோதைக்கு அடிமையான பிரசாத், எப்போதும் வேலைகளுக்கு கூட செல்லாமல் சுற்றி வந்துள்ளார்.
இதனால் குடும்பத்தில் நிம்மதியில்லாத சூழல் நிலவி வந்த நிலையில், அவ்வப்போது வெங்கடேஷ் வீட்டாரிடமும் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த பெற்றோர், நேற்று போதையில் தகராறு செய்து மகனை அடித்துக்கொலை செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் மகன் உயிரிழந்துவிட, அவரின் உடலை வயல் வெளியில் வீசிவிட்டு எதுவும் தெரியாததுபோல் வீட்டிற்கு வந்து வந்துள்ளனர்.
மறுநாள் காலையில் கிராம மக்கள் பிரசாத்தின் சடலத்தை கண்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பிரசாத்தின் உடலை உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் உண்மை சம்பவம் அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து, மகனை கொலை செய்த பெற்றோரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்படி விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.