திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#JustIN: தொடர் மழை எதிரொலி.. வீட்டின் சுவர் இடிந்து, உறங்கிக் கொண்டு இருந்த சிறுமி மரணம்.! காலையிலேயே துயரம்.!
தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் முழுவதும் இன்று 29 மாவட்டங்களில் மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழையானது பெய்து வருகிறது. இதனால் பத்துக்கு மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மற்றும் நள்ளிரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், அதம்பார் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமத்தில் வீடு ஒன்றில் உறங்கிக் கொண்டிருந்த சிறுமியின் மீது வீட்டின் சுவர் மழையினால் இடிந்து விழுந்தது.
இந்த சம்பவத்தில் சிறுமி மோனிஷா பரிதாபமாக நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். சிறுமியின் சகோதரர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்படி விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.