மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அம்பேத்கர் பேனர் வைக்க சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி மரணம்.. கர்ப்பிணி மனைவி கண்ணீர் குமுறல்..!
அம்பேத்கரின் பிறந்தநாள் பேனர் வைக்க சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம் கிராமத்தில் வசித்து வருபவர் சண்முகம். இவரின் மகன் சின்னத்துரை (வயது 31). இவருக்கு திருமணம் முடிந்து மனைவி இருக்கிறார். சின்னத்திரையின் மனைவி கர்ப்பமாக இருக்கிறார்.
இந்நிலையில், நேற்று அம்பேத்கர் பிறந்தநாள் விழா சிறப்பிக்கப்பட்ட நிலையில், அவரின் கிராமத்தில் இளைஞர்கள் பேனர் வைத்தனர். அப்போது, பேனரின் மீது மின்சாரம் பாய்ந்த நிலையில், பேனர் மீது கை வைத்திருந்த சின்னத்துரையின் உடலில் மின்சாரம் தாக்கியுள்ளது.
இதனால் தூக்கி வீசப்பட்ட அவர், நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த முத்துப்பேட்டை காவல் துறையினர், சின்னத்துரையின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது.