மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பரிதாப பலி; வளைவு பகுதியில் கவனம் தேவை பயணிகளே.!
திருவாரூர் நகரில் வசித்து வருபவர் ஹபீப் நிஷா (வயது 31). இவர் தனது உறவினரோடு வங்கிக்கு செல்ல, குடும்பகோணத்தில் இருந்து திருவாரூருக்கு தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.
இந்த பேருந்து காட்டூர், விளாகம் கிராமத்திற்கு அருகே வந்தபோது, பேருந்தில் இருந்து இறங்க ஹபீப் நிஷா எழுந்து வாசல் பகுதிக்கு அருகே வந்து நின்றுள்ளார்.
அச்சமயம் வளைவில் பேருந்து திரும்பும்போது, எதிர்பாராத விதமாக பேருந்தில் இருந்து தவறி விழுந்தார். இதனால் அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
விபத்தில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.