மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரூ.40 ஆயிரம் கடன் கொடுத்தவர் கொடூர கொலை: கடனை திரும்ப கேட்டதால் நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தெர்மல் நகர், லேபர் காலனியில் வசித்து வருபவர் ஜோசப். இவரின் மகன் ஜெகன் ராஜ் (30). கூலித்தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார்.
ஜெகன் ராஜ் நேற்று மதியம் தனது தெருவில் நின்றுகொண்டு இருந்த சமயத்தில், அங்கு வந்த சில மர்ம நபர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர். இருதரப்பு வாக்குவாதம் முற்றவே, ஆத்திரத்தில் ஜெகன்நாதனை கும்பல் கத்தியால் வெட்டி, குத்தி அங்கிருந்து தப்பிச்சென்றது.
படுகாயமடைந்த ஜெகன் ராஜ் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அப்பகுதியை சேர்ந்த நவநீதன், செல்வம், சக்தி ஆகியோர் ஜெகன் ராஜை கொலை செய்தது அம்பலமானது. இவர்களில் சக்தி தவிர்த்து எஞ்சிய இருவரும் நேற்று இரவிலேயே கைது செய்யப்பட்டனர்.
கொலைக்கான காரணம் தொடர்பாக விசாரித்தபோது, ஜெகன்நாதனிடம் செல்வம் மூலமாக நவநீதன் மற்றும் சக்தி கடன் வாங்கி இருக்கின்றனர். கடன் தொகையான ரூ.40 ஆயிரத்தை ஜெகன் கேட்டபோது தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த மூவர் சேர்ந்து கடன் கொடுத்த ஜெகன் நாதனை கொலை செய்தது உறுதியானது. சக்தியை அதிகாரிகள் தொடர்ந்து தேடி வருகின்றனர்.