திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Breaking: தொடர்ந்து ஐந்தாவது நாள்: தூத்துக்குடி மாவட்டத்தில் நாளையும் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களை புரட்டியெடுத்த வரலாறு காணாத மழையினால், அங்குள்ள பல நகரங்களின் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் அம்மாவட்டங்களை பதம்பார்த்தது.
மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு அரசு ரூ.6 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிதிஉதவி அளிப்பதாக தெரிவித்துள்ளது. அத்தியாவசிய நிவாரண பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தொடர்ந்து ஐந்தாவது நாளாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருக்கின்றன.
நெல்லை மாவட்டத்தை பொறுத்தமட்டில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும்.
பாதிக்கப்பட்ட இடத்தில் செயல்படும் 8 பள்ளிகள் விடுமுறை குறித்து, சூழ்நிலைக்கேற்ப தலைமை ஆசிரியர்கள் முடிவு எடுத்து அறிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.