ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
கணவனின் வியர்வையில் உல்லாச வாழ்க்கை; கருத்து வேறுபாடு, துரோகத்தால் மனைவியை அரிவாளால் பதம்பார்த்த கணவன்.. பறிபோன உயிர்.!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம், முத்தலாபுரம், கோட்டூர் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன். பி.காம் பட்டதாரியான இவர் சிங்கப்பூரில் எலக்ட்ரீஷியனாக வேலைபார்க்கிறார். தூத்துக்குடியை சேர்ந்த எம்.ஏ., பி.எட் பட்டதாரி சந்தன மாரியம்மாள் (வயது 32). தம்பதிகள் இருவருக்கும் கடந்த 2017 ல் திருமணம் நடைபெற்று முடிந்தது. திருமணத்திற்கு பின்னர் பாலமுருகன் மனைவியை தன்னுடன் சிங்கப்பூருக்கு அழைத்துசென்றுள்ளார்.
பின் 6 மாதங்கள் கடந்து தூத்துக்குடி வந்த சந்தன மாரியம்மாள், தூத்துகுடியிலேயே வசித்து வந்துள்ளார். பாலமுருகன் தான் வேலைபார்த்த ரூ.10 இலட்சம் பணத்தையும் மனைவிக்கு அனுப்பி வைத்துள்ளார். 50 சவரன் நகைகளும் வழங்கி இருக்கிறார். அந்த பணத்தை வைத்து 2018 ம் ஆண்டு கிருபை நகரில் தனது பெயரில் இடம் வாங்கிய மாரியம்மாள், வீடுகட்டி குடியிருந்து வந்துள்ளார்.
தம்பதிகள் இருவருக்கும் 5 வயதுடைய ஆண்குழந்தை இருக்கிறது. இதனிடையே, இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வந்த மாரியம்மாள், தனது புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு பல ஆண் நண்பர்களுடன் நட்பை ஏற்படுத்தியுள்ளார். பாலமுருகன் கடந்த ஓராண்டுக்கு முன் வீட்டிற்கு திரும்ப, உடல்நலம் குன்றி மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்பட்ட காரணத்தால் சம்பாதித்து அனுப்பிய பணம் குறித்து மனைவியிடம் கணவர் கேட்டுள்ளார்.
சந்தன மாரியம்மாளோ அதற்கு உரிய பதிலை அளிக்க மறுக்க, தம்பதியிடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. மேலும், இன்ஸ்டாகிராம் நட்பு குறித்து கணவர் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்ட இருவரும் 6 மாதமாக பிரிந்து வாழ்கிறார்கள். இதனிடையே, சந்தன மாரியம்மாள் தனது தாய்மாமா காளிமுத்துவிடம் நகை வாங்கி ஏமாற்றியதாகவும் தெரியவருகிறது.
இந்த சண்டையில் மாரியம்மாவின் தம்பி தனது தாய்மாமாவை அரிவாளால் வெட்டிய வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த சந்தன மாரியம்மாளை பாலமுருகன் மற்றும் காளிமுத்து சேர்ந்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர். பின் இருவரும் தென்பாகம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். விசாரணையில் மேற்கூறிய தகவல் வெளியாகியது.