பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்கள்தான்? வெளியான தகவல்.!
மனைவியை கலாய்த்த நண்பன்.. சரக்கு ஊற்றிவிட்டு கொலை, உடல் புதைப்பு.. கணவனாக பரபரப்பு சம்பவம்.!
நண்பன் தனது மனைவியை கிண்டலடித்து வந்ததால், ஆத்திரமடைந்து கொலை செய்து உடலை புதைத்த சம்பவம் நடந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திரேஸ்புரம் பகுதியில் வசித்து வருபவர் வாசகம். இவரின் மகன் மதன்குமார் (வயது 21). ஆலந்தழை தெற்கு தெருவில் வசித்து வருபவர் லியோ (வயது 30), தாளமுத்து நகரை சேர்ந்தவர் மல்லையா (வயது 30), மரிய அந்தோணி (வயது 29). இவர்கள் நால்வரும் நண்பர்கள் ஆவார்கள். ஒன்றாக சேர்ந்து மீன் பிடிக்க செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மாலை நேரத்தில் மதன்குமாரை நண்பர்கள் மதுபானம் அருந்த அழைத்து சென்ற நிலையில், நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. நண்பர்களிடம் கேட்டபோது சரியான பதில் கிடைக்காத காரணத்தால், திருச்செந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ளத்தொடங்கிய சில நிமிடத்திலேயே, மதனை கொலை செய்து காட்டுப்பகுதியில் புதைத்துள்ளோம் என நண்பர்கள் வாட்ஸப்பில் ஆடியோவை பதிவு செய்தனர். இதனையடுத்து லியோ, மரிய அந்தோணி, மல்லையாவை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டதில் கொலை உறுதியாக, அவரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
காவல் துறையினரின் விசாரணையில், "மதன்குமார் நண்பர் லியோவின் மனைவியை அவ்வப்போது கிண்டல் செய்து வந்த நிலையில், இதனை லியோ வன்மையாக கண்டித்துள்ளார். நேற்றும் மதன் குமார் லியோவின் மனைவியை கிண்டலடிக்க, அவரை கொலை செய்திடலாம் என எண்ணியுள்ளார். இதற்கு பிற நண்பர்களான மல்லையா, மரிய அந்தோணியும் ஒத்துழைத்துள்ளனர்.
இதனையடுத்து, நால்வரும் ஒன்றாக என். முத்தையாபுரம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு மதுபானம் அருந்த சென்ற நிலையில், போதையில் மதனை நண்பர்கள் மூவருமாக சேர்த்து கொலை செய்து, உடலை குழிதோண்டி புதைத்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.