மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பழிக்குப்பழி.. நண்பனை கொன்றவரின் தலையை துண்டித்து... தூத்துக்குடியில் நடந்த பயங்கரம்.!
தூத்துக்குடியில் உள்ள டிஎம்பி காலனி சலவைக்கூடம் பகுதியில் ரத்தக்கறையுடன் பை ஒன்று கிடந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், தூத்துக்குடி நகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்த அதிகாரிகள் விரைந்து வந்து, பையை சோதனை செய்தபோது வாலிபரின் தலை துண்டிக்கப்பட்டு இருந்துள்ளது. பின் தலை இல்லாத உடல் எங்கு கிடக்கிறது? என அதிகாரிகள் தேடிய போது, அங்குள்ள மையவாடி பகுதியில் உடல் கண்டெடுக்கப்பட்டது.
தலை-உடலை மீட்ட அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தபின், காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கொலையான நபர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மில்லர்குளம் ஹவுசிங் போர்டு காலனியில் வசித்து வரும் சுமைதூக்கும் தொழிலாளி மாரியப்பன் (வயது 43) என்பது தெரியவந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி அண்ணாநகர் முதல் தெருவை சார்ந்த தனது நண்பர் சப்பாணி முத்து (வயது 42) என்பவருடன் மதுபானம் அருந்தி, போதையில் ஏற்பட்ட தகராறில் சப்பாணியை மாரியப்பன் தலையில் கல்லைத்தூக்கிப்போட்டு கொலை செய்தார்.
மறுநாளில் காவல் நிலையத்திலும் விஷயத்தை கூறி சரணடைந்த நிலையில், இவ்வழக்கில் கைதாகி சிறைக்கு சென்ற மாரியப்பன் சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
இந்த கொலைக்கு பழிக்குப்பலியாக அவரது உறவினர்கள் மாரியப்பனை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து, தலையை துண்டித்து சப்பானி முத்து கொலை செய்யப்பட்ட இடத்தில் தலையை போட்டதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சப்பாணி முத்துவின் உறவினர்கள் 2 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.